என் மலர்
நீங்கள் தேடியது "மருத்துவ உதவி"
- பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மரணத்தின்போது மருத்துவ கவனிப்பைப் பெறவில்லை.
- 2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை (102.2 லட்சத்தில் இருந்து 86.5 லட்சமாக) 15.4% குறைந்துள்ளது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் ஏறக்குறைய பாதி பேர், மரணிக்கும் சமயத்தில் எந்தவித மருத்துவ உதவியையும் பெறவில்லை என 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் பதிவு அமைப்பு (CRS) வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.
2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளில் 50.7% பேர் மரணத்தின்போது மருத்துவ கவனிப்பைப் பெறவில்லை. 2020 உடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீத சரிவாகும்.
மொத்த இறப்புகளில் எவ்வளவு சதவீதம் பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான தரவுகள் இல்லாததால், உண்மையான நிலை இன்னும் மோசமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
2021 உடன் ஒப்பிடுகையில்,2022 இல் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை (102.2 லட்சத்தில் இருந்து 86.5 லட்சமாக) 15.4% குறைந்துள்ளது.
இது 2021 இல் கோவிட்-19 டெல்டா அலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டுகிறது.
2022 இல் வெறும் 22.3% இறப்புகளுக்கு மட்டுமே மருத்துவ ரீதியாக காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, முக்கால்வாசி இறப்புகளுக்கான காரணங்கள் வகைப்படுத்தப்படவில்லை. இது மருத்துவ கவனிப்பு இல்லாததால் ஏற்பட்ட பாதிப்பாகும்.
மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்ட இறப்பு விகிதம் (MCCD) மாநிலங்களுக்கு இடையே பெரும் வேறுபாடுகளைக் காட்டுகிறது. உதாரணமாக, பீகாரில் 5.4%, தமிழ்நாட்டில் 43%, சிக்கிமில் 48.6% MCCD விகிதம் உள்ளது.
2022 இல் இந்தியாவின் சிசு மரண விகிதம் (stillbirth rate) 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 7.54 ஆக குறைந்துள்ளது. இது இந்தியாவின் 'நியூபார்ன் ஆக்ஷன் பிளான்' இலக்கை எட்டியுள்ளது. இருப்பினும், மேகாலயா (14.46), ராஜஸ்தான் (12.91), குஜராத் (10.47) போன்ற மாநிலங்கள் கவலைக்குரிய நிலையில் உள்ளன.
இந்த தரவுகள் இந்தியாவின் சுகாதார அமைப்பு, இறப்புப் பதிவு மற்றும் சமூக வளர்ச்சியில் உள்ள சவால்களை வெளிப்படுத்துகின்றன.
- குடியரசு தினத்தை முன்னிட்டு த.மு.மு.க. சார்பில் ரூ. 52 ஆயிரத்தை கல்வி, மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
- ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி பராமரிப்புக்கு நிதியாக ரூ. 20 ஆயிரம் வழங்கினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் த.மு.மு.க. தலைமை அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் தேசிய கொடியை ஏற்றி கல்வி மற்றும் மருத்துவ உதவியாக ரூ. 52 ஆயிரம் வழங்கினார்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூர் சாதிக் அலி என்பவருக்கு உயர் கல்வி உதவியாக ரூபாய் 12 ஆயிரம், மதுரை மாவட்ட த.மு.மு.க. நிர்வாகிகள் பரிந்துரை அடிப்படையில் மதுரையில வசிக்கும் பாத்திமா என்ற பெண்ணிற்கு ரூ. 10 ஆயிரம், கன்னியாகுமரி மாவட்ட த.மு.மு.க. நிர்வாகிகள் பரிந்துரை அடிப்படையில் விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேருக்கு மருத்துவ உதவியாக ரூ. 10 ஆயிரம், ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி பராமரிப்புக்கு நிதியாக ரூ. 20 ஆயிரம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க.மாவட்டத் தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, ம.ம.க. மாவட்ட துணைச் செயலாளர் ஜாஹிர் பாபு, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் சுலைமான், வர்த்தக அணி காஜா சுகுபுதீன், மாவட்ட துணை செயலாளர் அப்துல் சாகுல் ஹமீது, தென் மண்டல செயலாளர் அப்துல் வாஜித், சமூக நீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான்,மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளர் தாஜுதீன், த.மு.மு.க நகர் செயலாளர் முகம்மது தமிம், ம.ம.க. நகர் செயலாளர் அப்பாஸ்,நகர் பொருளாளர் மைதீன் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஏரியை நவீனப்படுத்தவும், ஏரிக்கரையில் பூங்கா அமைக்கவும்ரூ.1 கோடி யே 93 லட்சத்து 80 ஆயிரம்ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- வயிற்றில் கட்டி அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனையேரியை சேர்ந்த பெண் ராணிஎன்பவரை பார்வையிட்டு மருத்துவ உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
விழுப்புரம்:
செஞ்சி திருவண்ணாமலை சாலையில் பி. ஏரி உள்ளது. இதனை நவீனப்படுத்தவும், ஏரிக்கரையில் பூங்கா அமைக்கவும்ரூ.1 கோடி யே 93 லட்சத்து 80 ஆயிரம்ஒதுக்கீடு செய்ய ப்பட்டு அப்பணி தொடங்கு வதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கினார்.
மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்து றை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செஞ்சி யூனியன் தலைவர் விஜய குமார், தாசில்தார் நெகருன்னிசா, மாவட்ட விவசாய அணி அஞ்சா ஞ்சேரி கணேசன், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, மாவட்டவழக்கறிஞர் அணி மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் நெடு ஞ்செழியன், பச்சையப்பன், அண்ணாதுரை பேரூராட்சி துணைத்தலைவர் ராஜ லட்சுமி செயல்மணி மற்றும் அனைத்துபேரூரா ட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி அரசு மருத்துவமனையில் வயிற்றில் இருந்து 6 கிலோ கட்டி அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனையேரியை சேர்ந்த பெண் ராணிஎன்பவரை பார்வையிட்டு மருத்துவ உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.






